பணியிடங்களில் மனித சக்தியை குறைக்கும் "Robotic Process Automation".. ஒரு பார்வை

0 1936

தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம்.

Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம்.

மனிதன் டு மெஷின்:

சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது.

ரோபோக்கள் இல்லை:

Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் முறையில் செய்வது. இந்த தொழில்நுட்பத்தில் Robotic என்ற வார்த்தையை பார்த்து மனிதர்களுக்கு பதில் ரோபோக்கள் வேலை செய்யுமோ என்று நினைத்து கொள்ள வேண்டாம். Robotic என்ற வார்த்தைக்கு executor என பொருள் கொள்ளலாம். அதாவது கட்டளையை நிறைவேற்றுபவர்.

மென்பொருள்:

இது ஒரு வகையான மென்பொருள் தான். இதை வைத்து மேனுவலாக செய்யும் வேலைகளை எப்படி ஆட்டோமேட் செய்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். சிறிய அளவிலான மாற்றம் கூட இல்லாமல் வழக்கமாக செய்யும் பணிகளை இதன் மூலம் ஆட்டோமேட் செய்யலாம்.

image

டிக்கெட் மெஷின்:

உதாரணத்திற்கு ரயில் நிலையங்களை எடுத்து கொள்ளுங்கள். முன்பெல்லாம் Counter-க்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட்டுகளை எடுப்போம். ஆனால் இப்போது பல ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள டிக்கெட் மெஷின்களில் உரிய பணத்தை உள்ளே செலுத்திவிட்டால், அதுவே டிக்கெட்டுகளை நமக்கு தந்து விடுகிறது.

பணம் எடுக்க, போட..:

அதே போல சில வங்கிகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது என முக்கிய இரு வேலைகளுக்கும் மெஷின்கள் வைக்கப்பட்டு விட்டன. பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மெஷின்களும், பணம் போடுவதற்கு கேஷ் டெபாசிட் மெஷின்களும் உள்ளது. முன்பு இந்த வேலைகளை கவனிக்க இருந்த மனித சக்தி இப்போது இல்லை.

image

தவறுக்கு வாய்ப்பு குறைவு:

அதே போல் மனிதர்கள் செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்வது இயல்பு. ஆனால் Robotic Process Automation-ல் பெரும்பாலும் தவறுகள் நிகழாது. தவறுகள் நிகழும் வாய்ப்பும் குறைவு. சிந்திக்க தேவை இல்லாத திரும்ப, திரும்ப செய்யும் வகையிலான வேலைகளை Automation செய்யலாம்.

வல்லுநர்கள் முக்கிய பங்கு:

சில நிறுவனங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் இல்லாத காரணத்தால் சமயத்தில் RPA தோல்வியடைய வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த தருணத்தில் பணிகள் மற்றும் செயல்முறைகளை அடையாளம் காண, அதற்கு முன்னுரிமை அளிக்க வணிக செயல்முறை வல்லுநர்கள் உதவி முக்கிய பங்கு வகிப்பார்கள்.

image

பிரபலமான மூன்று:

Robotic Process Automation-ஐ பொறுத்தவரை பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் Blue Prism, UiPath, Automation Anywhere இந்த மூன்றே மிக பிரபலமானவை மற்றும் அதிகம் பயன்படுத்த கூடியவையாக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments